நம்மாழ்வார் பிறந்தநாள் திருவிழா!

நம்மாழ்வார்

யற்கை வேளாண் விஞ்ஞானி, அய்யா நம்மாழ்வார் அவர்களின் பிறந்த நாள் விழா, தாம்பரம் மேற்கு, முத்துலிங்கம் வீதி, புது மார்க்கெட், எம்.ஆர்.தியேட்டர் பின்புறம் உள்ள, பேபி உயர்நிலை பள்ளியில், 07.04.2024 ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ளது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளும், இயற்கை வேளாண் வல்லுநர் அரியனூர் ஜெயச்சந்திரன், இயற்கை வேளாண் வளர்ச்சியும் ஐயா நம்மாழ்வாரும் என்னும் தலைப்பில், வேளாண் நுட்பங்கள் சார்ந்த சிறப்புரை ஆற்ற உள்ளார்.

நம்மாழ்வார் விருது பெறும் சிறப்பாளர்கள், இயற்கை வேளாண் நுட்பங்கள் மற்றும் மதிப்புக்கூட்டு உற்பத்திக் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.

செய்யூர் பாலாஜிக்கு, சிறந்த இயற்கை விவசாயி விருதும், இராஜகணேஷ்க்கு சிறந்த இயற்கை வேளாண் பயிற்றுநர் விருதும் வழங்கப்பட உள்ளன.

இந்நிகழ்வில், 7 முதல் 15 வயது வரையுள்ள குழந்தைகள் பங்கேற்கும், இயற்கைத் தாத்தா நம்மாழ்வார் என்னும் தலைப்பிலான பேச்சுப் போட்டி நடக்க உள்ளது.

இதில், பங்கேற்க விரும்பும் குழந்தைகள், மூன்று நிமிடத்துக்குள் பேசி, அதை வீடியோவாகப் பதிவு செய்து, 86104 57700 என்னும் வாட்சாப் எண்ணுக்கு அனுப்பி வைக்கலாம். 04.04.2024-க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

சிறப்பாகப் பேசிய குழந்தைகளுக்கு, 07-04-24 அன்று, விருதும் சான்றிதழும் வழங்கப்படும்.

இந்த விழாவில் இடம் பெறும், வள்ளுவம் இயற்கைச் சந்தையில், தூய காய்கறிகள், கீரைகள், பாரம்பரிய அரிசி வகைகள், சிறு தானியங்கள், பருப்பு வகைகள், சமையல் பொடி வகைகள், குழந்தைகளின் மரபு தின்பண்டங்கள்,

சமையல் மண்பானைகள், துணிப்பைகள், சணல் கைவினைப் பொருள்கள், பனையோலைப் பொருள்கள், சிற்பங்கள், ஓவியங்கள் கிடைக்கும். அனுமதி இலவசம்.

மேலும் விவரங்களுக்கு: இரா.வெற்றிமாறன், ஒருங்கிணைப்பாளர், 95666 67708, 74485 58447.


செய்தி: நம்மாழ்வார் மக்கள் குழு, வள்ளுவம் இயற்கைச் சந்தை.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!