பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற தோட்டக்கலை மாணவர்கள்!

பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்களான, அபினேஷ், அபிஷேக், ஆதித்யா, ஆதித்யா யாதவ், அருள்குமார், பாலமுருகன், பாரத், போதியரசு, சிற்றரசு ஆகியோர், நத்தம் பகுதியில், கிராமப்புற வேளாண் பணி அனுபவத் திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில், விவசாயிகளுக்கான வாழ்நாள் கல்வித் திட்டம் மற்றும் விவசாயிகள் வளர்ச்சிக்கான வாழ்நாள் தொடர் கல்வித்தளம் குறித்த பயிற்சிப் பட்டறையில் பங்கு பெற்றனர்.

மேலும், விவசாயிகளுக்கு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் தொழில் நுட்பங்களை எடுத்துரைத்தனர். விவசாயிகள் பயன்பெறும் வகையில், இந்தப் பயிற்சிப் பட்டறை அமைந்திருந்தது.


தகவல்: கே.பாலமுருகன், தோட்டக்கலைப் பயிற்சி மாணவர்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!