Articles

காய்கனிக் கழிவுகளில் காகிதம் தயாரித்தல்!

காய்கனிக் கழிவுகளில் காகிதம் தயாரித்தல்!

மரங்கள் மற்றும் புல்லிலிருந்து பெறப்படும் கூழான செல்லுலோசை அழுத்துவதன் மூலம் கிடைக்கும் மெல்லிய பொருள் காகிதம். இது, எழுத, அச்சிட, சிப்பமிட, சுத்தம் செய்ய, அழகு செய்ய மற்றும் கட்டுமான வேலைகளுக்குப் பயன்படுகிறது. இன்று காகிதத்தின் தேவை கூடியுள்ளது. அதே நேரத்தில்…
More...
காலநிலை மாற்றத்துக்கு உகந்த வேளாண் உத்திகள்!

காலநிலை மாற்றத்துக்கு உகந்த வேளாண் உத்திகள்!

கடந்த நாற்பது ஆண்டுகளாக நமது தேசிய விவசாயக் கொள்கைகள், உத்திகள், செயல்கள் மற்றும் திட்டங்கள் ஆகியன, உணவு உற்பத்தியில் தன்னிறைவை நோக்கியே இருந்து வருகின்றன. இதில் நாம் வெற்றி பெற்றிருந்தாலும், இயற்கைச் சீர்கேடு, மக்கள் பெருக்கம், அதற்கேற்ற உணவு உற்பத்தி, வறுமை…
More...
விவசாயிகளின் நண்பன் கரையான்!

விவசாயிகளின் நண்பன் கரையான்!

மண்ணில், மண்புழுக்கள், கரையான்கள், மரவட்டைகள், பூரான்கள் என்று பலவும் உள்ளன. இவற்றில், கரையானைப் பற்றிய தவறான கருத்து ஒன்று உண்டு. அதாவது, கரையான் செடிகளைத் தின்று விடும் என்பது. அதனால், கரையானைக் கொல்வதற்கு டன் கணக்கில் நிலத்தில் நஞ்சைக் கொட்டி வருகிறோம்.…
More...
புறா வளர்ப்பு!

புறா வளர்ப்பு!

புறா, முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவை. இது, கொலம்பிடே என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. இந்தக் குடும்பத்தில் ஏறத்தாழ 310 இனங்கள் உள்ளன. புறா சமாதானத்தின் அடையாளம் ஆகும். பரவல் மற்றும் வாழ்விடம் புறாக்கள் உலகெங்கும் பரவலாக இருந்தாலும், சஹாராப் பாலைவனம், ஆர்க்டிக்,…
More...
நியான் டெட்ரா மீன் வளர்ப்பு!

நியான் டெட்ரா மீன் வளர்ப்பு!

நியான் டெட்ரா (Paracheir odoninnesi) மீன், தென் அமெரிக்காவைச் சார்ந்த சிறிய நன்னீர் மீனாகும். ஒளிரும் நிறங்கள், அமைதியான குணம், எளிதான கவனிப்பு, எளிய உணவு ஆகியன இம்மீனின் சிறப்புகள் ஆகும். இதனால், மீன் வளர்ப்பில் ஈடுபடுவோர் இம்மீனை மிகவும் விரும்புகின்றனர்.…
More...
மண் பரிசோதனையின் அவசியம்!

மண் பரிசோதனையின் அவசியம்!

ஆட்டெரு, மாட்டெரு, இலைதழை என இயற்கை உரங்களைப் போட்டு விவசாயம் செய்த காலம் மாறி விட்டது. இயற்கை உரங்களை மறந்து செயற்கை உரங்களைப் போடப் பழகி விட்டனர் விவசாயிகள். இதனால் கூடுதலான இடுபொருள் செலவுகளுக்கு ஆளாகியுள்ள விவசாயிகளுக்கு, வரமாக அமைந்தது தான்…
More...
குதிரைவாலியின் வளர்ச்சிக்கு உதவும் நுண்ணுயிர்!

குதிரைவாலியின் வளர்ச்சிக்கு உதவும் நுண்ணுயிர்!

குதிரைவாலி வறட்சியைத் தாங்கி வளர்வதால் மானாவாரிப் பயிராகப் பயிரிடப்படுகிறது. நீர்த் தேங்கும் ஆற்றுப் படுகையிலும் ஓரளவு வளரும். மணல் கலந்த களிமண் நிலத்தில் நன்கு வளரும். கற்கள் நிறைந்த மண் மற்றும் சத்துகள் குறைந்த மண் சாகுபடிக்கு ஏற்றதல்ல. வெப்பம் மற்றும்…
More...
சிறு குறிஞ்சான் என்னும் சர்க்கரைக் கொல்லி!

சிறு குறிஞ்சான் என்னும் சர்க்கரைக் கொல்லி!

சிறு குறிஞ்சான் மூலிகை, சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மருந்து. இது, வேலிகளில் கொடியாகப் படரும். கசப்புச் சுவையில் இருக்கும். இலை சிறிதாக, கூர்மையான முனையுடன் மிளகாய் இலையைப் போல இருக்கும். மலையைச் சார்ந்த காடுகளில் அதிகமாக வளரும். இதைத் தமிழில்,…
More...
சத்துகள் வீணாகாமல் சமைத்தல்!

சத்துகள் வீணாகாமல் சமைத்தல்!

நாம் வாங்கும் காய்கறிகள் அடிபடாத, கெடாத மற்றும் பூச்சிகளின் பாதிப்பு இல்லாத வகையில் இருக்க வேண்டும். புத்தம் புது காய்களையே வாங்க வேண்டும். வாங்கியதும் உடனே கழுவி உலர்த்த வேண்டும். பின், குளிர்ந்த, தூய்மையான இடத்தில் பாதுகாக்க வேண்டும். கேரட், முள்ளங்கி…
More...
கோடையில் இறைச்சிக் கோழிகள் பராமரிப்பு!

கோடையில் இறைச்சிக் கோழிகள் பராமரிப்பு!

இறைச்சிக்கோழி, புரதம், தாதுப் பொருள்கள், வைட்டமின்கள் அடங்கிய சரிவிகித உணவைத் தரும் பறவையாகும். இது விரைவாக வளர்ந்து அதிக உணவை இறைச்சியாக மாற்றும் திறன் மிக்கது. இறைச்சிக் கோழிப் பண்ணைத் தொழில், நல்ல வருமானம் மற்றும் ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பைத்…
More...
சிக்கனப் பாசனமே சிறந்தது!

சிக்கனப் பாசனமே சிறந்தது!

கோடைக்காலம் தொடங்கி விட்டது. போதுமான அளவு பெய்யாமல் பருவ மழை பொய்த்துப் போனதால் இந்தாண்டு வெய்யிலின் தாக்கமும் அதிகமாகவே இருக்கும். கடுமையான வறட்சியைச் சந்திக்க வேண்டும். குடிநீர்ப் பஞ்சம் தலை தூக்கும். வேளாண்மைக்குத் தேவையான நீர் கிடைக்காது. கால்நடைகளுக்கு வேண்டிய தீவனத்தில்…
More...
முடக்கத்தான் கீரையின் பயன்கள்!

முடக்கத்தான் கீரையின் பயன்கள்!

மக்களுக்கு ஏற்படும் பிணிகளைப் போக்கும் மருந்துகளான மூலிகைகள், இயற்கையின் ஏற்பாட்டில், தேவையுள்ள பகுதிகளில், தாமாகவே விளைந்து வருகின்றன. இவற்றைச் சரியாகக் கண்டுபிடித்து உண்டு, தங்களுக்கு ஏற்படும் நோய்களைத் தீர்த்துக் கொள்ளும் வித்தையை, அனைத்து உயிர்களுக்கும் இயற்கை கற்றுக் கொடுத்து உள்ளது. ஆனால்,…
More...
வளங்குன்றா ஆற்றல்களில் மின்னுற்பத்தி!

வளங்குன்றா ஆற்றல்களில் மின்னுற்பத்தி!

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து தமிழகத்தில் மின்வெட்டு அறவே அகற்றப்படுவதாக அரசு அறிவித்திருக்கிறது. இது, தென்மேற்குப் பருவக்காற்றுக் காலம் என்பதாலும், காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரம் கை கொடுக்கும் என்பதாலும், இம்முடிவை எடுத்து உள்ளதாக அரசு…
More...
இட்டேரி என்னும் காட்டுப் பாதை!

இட்டேரி என்னும் காட்டுப் பாதை!

சுமார் நாற்து ஆண்டுகளுக்கு முன், இட்டேரிகளால் கிராமங்கள் இணைக்கப்பட்டு இருந்தன. இட்டேரி என்பது கொங்குச் சொல்லாகும். இருபுறமும் அடர்ந்த வேலி, நடுவில் ஒற்றையடிப் பாதை அல்லது மாட்டு வண்டிப் பாதை. இதுவே இட்டேரி. இன்று விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாறி…
More...
மணத்தக்காளி!

மணத்தக்காளி!

மணத்தக்காளியை தென் மாவட்டங்களில் குட்டித் தக்காளி, மிளகு தக்காளி என்று அழைப்பது உண்டு. இது, வரப்பு, ஏரி மற்றும் குளக்கரைகளில் தானாக வளரும் ஒருவகைச் செடி. பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்ட மணத்தக்காளி, கீரையாக உணவில் பயன்படுகிறது. இது எல்லோருக்கும் பிடித்த…
More...
மஞ்சளின் சிறப்புகள்!

மஞ்சளின் சிறப்புகள்!

ஆயுர்வேத மருத்துவத்தில் மஞ்சள் அதிகளவில் பயன்படுகிறது. மஞ்சள் வாசம் அமைதியைத் தரும். மஞ்சள் நிறம் திடத்தைத் தரும். மஞ்சள் நமக்கு நோயெதிர்ப்பு சக்தியைத் தரும். நோயைத் தடுக்கும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். உடலுக்கு நிறத்தைத் தரும், மஞ்சளைச் சுட்டுப்…
More...
பன்றிகளுடன் மீன் வளர்ப்பு!

பன்றிகளுடன் மீன் வளர்ப்பு!

ஒருங்கிணைந்த பண்ணை முறையில் பன்றிகளுடன் மீன்களை வளர்ப்பது சிறந்த முறையாகும். மீன் குளத்துக்கு அருகில் பன்றிகளை வளர்க்கலாம். குளக்கரையில் அல்லது குளத்து நீர்ப்பகுதிக்கு மேலே கொட்டிலை அமைத்தால், பன்றிக் கழிவு குளத்தில் விழுந்து உரமாகும். பண்ணையில் உள்ள கால்நடைகள் குடிக்க, கொட்டிலைச்…
More...
தக்காளியைத் தாக்கும் நோய்கள்!

தக்காளியைத் தாக்கும் நோய்கள்!

ஏழை, பணக்காரர் பேதமின்றி எல்லா வீடுகளிலும் தினமும் சமையலில் பயன்படுவது தக்காளி. சோலானேசியெ குடும்பத்தைச் சேர்ந்த செடியினம். புற்றுநோய் வராமல் தடுக்கும் சக்தி தக்காளிக்கு உண்டு. தக்காளியில், நியாசின், பி6 ஆகிய உயிர்ச் சத்துகள், மக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம் போன்றவை உள்ளன.…
More...
பூனை குறுக்கே சென்றால் அபசகுனமா?

பூனை குறுக்கே சென்றால் அபசகுனமா?

பூனை முக்கியமான செல்லப் பிராணி. பெரும்பாலான கிராமங்கள் மற்றும் நகரங்களில் பூனைகளை வளர்த்து வந்தாலும், பூனையைக் கண்டால் ஆகாது; பூனை குறுக்கே சென்றால் காரியத்தடை என்னும் மூட நம்பிக்கை உள்ளது. இது முற்றிலும் தவறு. இது, புலியினத்தைச் சார்ந்தது. இதை, தெய்விகத்…
More...