உலக வானிலை தினம் கொண்டாட்டம்!

துரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், 23.03.2024 அன்று உலக வானிலை தினம் கொண்டாடப்பட்டது.

வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் சுமார் 500 பேர், சமூக அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன், வானிலையியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர், குத்துவிளக்கு ஏற்றி வைக்க நிகழ்ச்சி தொடங்கியது.

உலக வானிலை தினம் மற்றும் 2024 கருப்பொருள் குறித்த தகவல்களுடன், வேளாண் வானிலையியல் துறை உதவிப் பேராசிரியர், முனைவர் ப.ஆர்த்திராணி வரவேற்புரை ஆற்றினார்.

பருவநிலை மாற்றம் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, உழவியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர், முனைவர் தி.இராகவன் சிறப்புரை ஆற்றினார்.

மாணவர்கள் சிலரும், உலக வானிலை தினம் மற்றும் காலநிலை மாற்றம் குறித்து உரையாற்றினர்.

பருவநிலை மாற்றம் மற்றும் விழிப்புணர்வு குறித்த ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

உலக வனிலை நாளின் சிறப்பு நிகழ்வாக, மரம் நடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியின் நிறைவாக, பயிர் இனப் பெருக்கம் மற்றும் மரபியல் துறை இணைப் பேராசிரியர், முனைவர் ந.ஆனந்தி நன்றியுரை வழங்கினார்.


முனைவர் ப.ஆர்த்தி ராணி, உதவிப் பேராசிரியர் – வேளாண் வானிலைத் துறை, வேளாண் ஆராய்ச்சி நிலையம், கோவில்பட்டி – 628 501.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!