விவசாயப் பழமொழிகள்
முன்னேர் போன வழியில் பின்னேர் போகும்!
மா பழுத்தால் கிளிக்காம், வேம்பு பழுத்தால் காக்கைக்காம்!
பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும்!
மழைமுகம் காணாத பயிரும் தாய்முகம் காணாத பிள்ளையும் போல!
அந்தி மழை அழுதாலும் விடாது!
பட்டா உன் பேரில் சாகுபடி என் பேரில்!
உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது!
கொடிக்குக் காய் கனமா?
கரும்பும் எள்ளும் கசக்கினால் தான் பலன்!
நண்டு கொழுத்தால் வளையில் தங்காது!
தழைத்த மரத்துக்கு நிழல் உண்டு!