நிலப்போர்வையின் பயன்கள்!

ழைத் துளிகளால் மண் சிதறுவதை, அரிப்பு ஏற்படுவதைத் தடுத்தல், நீர் ஆவியாவதைக் குறைத்தல், மண்ணில் நீர்ப்புகும் தன்மையைக் கூட்டல், களைகளைக் கட்டுப்படுத்தல், மண்ணின் அமைப்பை மேம்படுத்தல்,

மண்ணின் ஈரத்தைக் காத்தல் போன்ற நன்மைகளை, ஈரம் தாங்கிகள் செய்கின்றன. இவற்றால் மகசூல் கூடுகிறது. ஈரம் தாங்கிகளை எல்லா வகையான நிலங்களிலும் பாகுபாடின்றிப் பயன்படுத்தலாம்.

தென்னை நார்க்கழிவு, பண்ணைக் கழிவுகள், காய்ந்த இலைகள், களைகள், புற்கள், கரும்புத் தோகை, நெல்லுமி, கடலைத்தோல் போன்ற அனைத்தையும் ஈரம் தாங்கிகளாகப் பயன்படுத்தலாம்.

இவற்றை, வயலிலுள்ள பயிர்களுக்கு இடையில் பரப்பலாம். பெரிய மரங்கள் மற்றும் இளம் மரக் கன்றுகளை நட்ட பிறகு, அவற்றைச் சுற்றி இந்தக் கழிவுகளைப் பரப்பிப் பாசனம் செய்யலாம். இதனால், நிலத்தின் ஈரத்தைக் காக்கலாம். பாசனத்தைக் குறைக்கலாம். குறிப்பாக, இந்த ஈரம் தாங்கிகளைக் கோடையில் பயன்படுத்தினால் நல்ல பயன் கிடைக்கும்.


தொகுப்பு: பசுமை

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!