கொட்டில் முறையில் வான்கோழி வளர்ப்பு!

கொட்டில் முறையில் வான் கோழிகளின் உற்பத்தித் திறன் அதிகமாகும். மேலும், நோய்த் தடுப்பும், நல்ல மேலாண்மை முறையும் இதில் சாத்தியம்.

இம்முறையில், மழை, வெய்யில், காற்று, எதிரி விலங்குகள் ஆகியவற்றிடம் இருந்து வான் கோழிகளுக்குப் பாதுகாப்புக் கிடைக்கும்.

வெய்யில் அதிகமாக உள்ள பகுதிகளில் கொட்டிலின் நீளவாட்டம், கிழக்கு மேற்காக இருக்க வேண்டும்.

இரண்டு கொட்டிலுக்கு இடையில் குறைந்தது இருபது மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.

குஞ்சுகள் வளரும் கொட்டில், வளர்ந்த கோழிகள் வளரும் கொட்டிலில் இருந்து குறைந்தது 50-100 மீட்டர் இடைவெளியில் இருக்க வேண்டும்.

கொட்டிலின் அகலம் ஒன்பது மீட்டருக்கு மேல் இருக்கக் கூடாது. உயரம், தரையில் இருந்து 2.6-3.3 மீட்டர் இருக்கலாம்.

கொட்டிலின் கூரை, பக்கச் சுவரிலிருந்து ஒரு மீட்டர் அளவுக்கு வெளியே நீட்டியிருக்க வேண்டும். இதனால், மழைச்சாரல் கொட்டிலுக்குள் செல்வது தடுக்கப்படும்.

கொட்டிலின் தரை, ஈரத்தை உறிஞ்சாத கான்கிரீட் தரையாக இருக்க வேண்டும்.

ஆழ்கூளத் தரையில் வான் கோழிகளை வளர்க்கும் போது, முட்டைக் கோழிகளைப் பராமரிக்கும் முறைகளைக் கையாள வேண்டும்.

போதுமான தங்குமிடம், நீர், தீவனத் தட்டுகளுக்குத் தகுந்த இடவசதி இருக்க வேண்டும்.


மரு.ச.இளவரசன், உதவிப் பேராசிரியர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!