புகையான் கட்டுப்பாடு!

புகையானைக் கட்டுப்படுத்த வேண்டுமெனில், தழைச்சத்தை அதிகமாக இடக்கூடாது. மேலும், தழைச்சத்தை 3-4 தவணைகளில் பிரித்து இட வேண்டும்.

நீர் மறைய நீர் கட்ட வேண்டும். வயலில் உள்ள நீரை வடித்து விட்டு, வெய்யிலும் காற்றும் கிடைப்பதற்கு ஏதுவாக, பயிர்களை மடக்கி இடைவெளி தெரியும் வகையில் வைத்து, பூச்சிகளின் வளர்ச்சியைத் தடுக்க வேண்டும்.

பயிர்கள் பூப்பதற்கு முந்தைய பருவத்தில், நீரை நன்றாக வடித்து விட்டு, தூர்களில் நன்கு படும்படி, ஏக்கருக்கு ஒரு லிட்டர் அசாடிராக்டின்

அல்லது 200 கிராம் பை மெட்ரொசின் 50 டபிள்யு.ஜி. அல்லது அரை லிட்டர் பெனோபியூகார்ப் 50% இ.சி. அல்லது அரை லிட்டர் பிப்ரோனில் 5% எஸ்.சி.

அல்லது 60 மி.லி. குளோரான்ட்ரேனிலிரோல் 18.5% இ.சி. மருந்தை, 200 லிட்டர் நீரில் தெளிக்க வேண்டும்.

பயிர்கள் பூத்த பிறகு, நீரை வடித்து விட்டு, ஏக்கருக்கு 10 கிலோ கார்பரில் 10% தூள் அல்லது 500 மி.லி. பெனோபியூகார்ப் 50% இ.சி. மருந்தை,

தேவையான மணலில் கலந்து, பயிர்களின் அடிப்பகுதியில் நன்கு படும்படி தூவ வேண்டும்.

புகையானுக்கு எதிர்ப்பு சக்தியைத் தரும், பைத்ராய்டுகள், மீத்தைல் பாரத்தியான், குயினால்பாஸ் போன்ற மருந்துகளைத் தவிர்க்க வேண்டும்.


தொகுப்பு: பசுமை

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!