அறிகுறிகள்: பயிர்களில் குறைவான வளர்ச்சி, குறைவான தூர்கள் மற்றும் பக்கக் கிளைகள், இடைக்கணு நீளம் குறைதல்,
இலைகள் பச்சையம் இல்லாமல் பழுப்பு நிறமாக மாறுதல், இலையோரம் சிவப்பாகி மேற்புறமாக மடிதல்,
கிளைகள் ஒன்றுகூடி காலிஃபிளவர் போன்ற அமைப்பு உருவாதல், இலை நுனி வெள்ளையாக மாறிக் கீழ்நோக்கித் தொங்குதல்,
மொக்குகள், பூக்கள் உருச் சிதைதல், ஆங்காங்கே பயிர்கள் திட்டுத் திட்டாக வளர்ச்சி இல்லாமல் இருத்தல்.
ஈர நிலத்திலும் பயிர்கள் வாடியதைப் போல இருத்தல், உரிய காலத்துக்கு முன்பே பயிர்கள் முதிர்வு நிலையை அடைதல்.
கட்டுப்படுத்தும் முறைகள்: விதை நேர்த்தி: ஒரு கிலோ விதைக்கு வேப்ப எண்ணெய் 60 இசி திரவத் திரட்டு 2 மி.லி., அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் புளுரசன்ஸ்,
அல்லது 10 கிராம் பேசிலோமைசிஸ் லிலாசினாஸ் 1% நீரில் கரையும் தூளைக் கலந்து, விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
மண்ணில் இடுதல்: எக்டருக்கு 2.5 கிலோ சூடோ மோனாஸ் புளுரசன்ஸ் அல்லது பேசிலோ மைசிஸ் லிலாசினாசை, 50 கிலோ தொழுவுரத்தில் கலந்து மரத்துக்கு 20 கிராம் வீதம் இட வேண்டும்.
மேலும், எக்டருக்கு 2 டன் வேப்பம் புண்ணாக்கு அல்லது ஆமணக்குப் புண்ணாக்கு,
அல்லது கரும்பாலைக் கழிவு அல்லது பசுந்தாள் உரங்களான சணப்பை, கொளுஞ்சியைப் பயிரிட்டு மடக்கி உழ வேண்டும்.
தொகுப்பு: பசுமை