மாசிப் பட்டத்தில் இறவையில் எள் சாகுபடி!

ள், மிகச் சிறிய விதை என்பதால், நிலத்தை நன்கு உழ வேண்டும்.

+ எக்டருக்கு 5 கிலோ விதைகள் தேவைப்படும். இவற்றை 15 கிலோ மணலில் கலந்து விதைக்கலாம்.

+ இறவை எள் சாகுபடிக்கு, 10 சதுர மீட்டர் அல்லது 20 சதுர மீட்டர் பரப்பில் படுக்கைகளை அமைக்க வேண்டும்.

+ இந்தப் படுக்கைகள் குழியேதும் இல்லாமல், நீர்த் தேங்காத வகையில் இருக்க வேண்டும்.

+ பயிர் இடைவெளி 30×30 செ.மீ. அளவில் இருக்க வேண்டும்.

+ எக்டருக்கு 12.5 கிலோ டி.என்.ஏ.யூ. நுண்ணுரக் கலவை வீதம் எடுத்து, செறிவூட்டிய தொழுவுரத்தில் கலந்து நிலத்தில் இட வேண்டும்.

+ மாங்கனீசு சத்துக் குறையைப் போக்க, எக்டருக்கு 10 கிலோ மாங்கனீசு சல்பேட் வீதம் எடுத்து, 45 கிலோ மணலில் கலந்து இட வேண்டும்.

+ எக்டருக்கு 35:23:23 கிலோ, தழை, மணி, சாம்பல் சத்தை நிலத்தில் இட வேண்டும்.

+ செடிகள் பூக்கும் போதும், அதைத் தொடர்ந்து 10 நாட்கள் கழித்தும், ஒரு சதவீத டிஏபி கரைசலைத் தெளிக்க வேண்டும்.

+ 25 மற்றும் 45 நாளில் களையெடுக்க வேண்டும்.

+ செடியின் அடியிலிருந்து மேலேயுள்ள காயில் விதைகள் கறுப்பாக வந்ததும் அறுவடை செய்ய வேண்டும்.

+ எக்டருக்கு, 650 முதல் 750 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.


செய்தி: இயக்குநர், மாநில வேளாண்மை விரிவாக்க மேலாண்மை நிலையம், குடுமியான்மலை.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!