இ-நாம் ஏலம் மூலம் விளைபொருள்கள் விற்பனை!

துரை மாவட்டம், திருமங்கலத்தில், விடத்தகுளம் சாலையில் அமைந்துள்ள திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று (08.03.2024) கீழ்க்கண்ட விளை பொருள்கள், இ-நாம் ஏலம் மூலம் விற்பனை செய்து தரப்பட்டன.

திருமங்கலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் செங்கப்படை, உசிலம்பட்டி, தொட்டியபட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மூன்று விவசாயிகளின், 38,188 கிலோ வரகு, கிலோ ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.35 -க்கும், குறைந்தபட்சம் ரூ.34.50 -க்கும் விலை போனது. இதன் மூலம், ரூ.13,29,050- க்கு வர்த்தகம் நடைபெற்றது.

எஸ்.பி.நத்தம், செங்கப்படை, குன்னத்தூர், வில்லூர், உலகாணி, குலத்துவாய்பட்டி, விடத்தகுளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஒன்பது விவசாயிகளின், 11,020 கிலோ துவரை அரிசி, கிலோ ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.78-க்கும், குறைந்தபட்சம் ரூ.77 -க்கும் விலை போனது. இதன் மூலம், ரூ.9,04,302 -க்கு வர்த்தகம் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி விவசாயி மற்றும் செல்லம்பட்டி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின், 4,359 கிலோ பாரம்பரிய இரகமான கருப்புக்கவுனி நெல், கிலோ ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.75 -க்கும், குறைந்தபட்சம் ரூ.73 -க்கும் விலை போனது. இதன் மூலம், ரூ.3,24,850 -க்கு வர்த்தகம் நடைபெற்றது.

திருமங்கலம் மற்றும் உசிலம்பட்டியைச் சேர்ந்த இரண்டு விவசாயிகளின் 25,855 கிலோ CO-51 நெல், கிலோ ஒன்றுக்கு ரூ.21.50 -க்கு விலை போனது. இதன் மூலம், ரூ.5,55,883 -க்கு வர்த்தகம் நடைபெற்றது.

திருமங்கலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் 1,500 கிலோ குதிரைவாலி, கிலோ ஒன்றுக்கு ரூ.42 -க்கு விலை போனது. இதன் மூலம், ரூ.63,000 -க்கு வர்த்தகம் நடைபெற்றது.

காரைக்கேணி, எஸ்.பி.நத்தம் கிராமங்களைச் சேர்ந்த இரு விவசாயிகளின் 174.5 கிலோ எள், கிலோ ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.165 -க்கும், குறைந்தபட்சம் 160 -க்கும் விலை போனது. இதன் மூலம் ரூ.28,395 -க்கு வர்த்தகம் நடைபெற்றது.

காரைக்கேணி கிராமத்தைச் சேர்ந்த விவசாயியின் 300 கிலோ JCL நெல், கிலோ ஒன்றுக்கு ரூ.50 -க்கு விலை போனது. இதன் மூலம், ரூ.15,000 -க்கு வர்த்தகம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்த விவசாயியின் 32 கிலோ கொள்ளு, கிலோ ஒன்றுக்கு ரூ.65 -க்கு விலை போனது. இதன் மூலம், ரூ.2,080 -க்கு வர்த்தகம் நடைபெற்றது.

ஆக மொத்தம் இன்று ஒரே நாளில், ரூ.35,54,560 -க்கு வர்த்தகம் நடைபெற்றது.

மேலும் விவரங்களுக்கு அணுக வேண்டிய தொலைபேசி எண்கள்:

விற்பனைக்கூடக் கண்காணிப்பாளர் G.வெங்கடேஷ்: 90251 52075.

மேற்பார்வையாளர்: 96008 02823.

சந்தைப் பகுப்பாளர்: 87543 79755.


செய்தி: திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!