நான்கு வாரங்களில் வளர்ந்து இறைச்சியைத் தருவது ஜப்பானிய காடை. ஒரு சதுரடியில் ஐந்து காடைகளை வளர்க்கலாம்.
முட்டைக்காகவும் இந்தக் காடைகளை வளர்க்கலாம். உயிருள்ள இறைச்சிக் காடையின் விற்பனை எடை 200 கிராம்.
இதை உயிர் நீக்கிச் சுத்தம் செய்தால் 120-130 கிராம் இறைச்சிக் கிடைக்கும்.
ஜப்பானிய காடைகளைக் கூண்டு அல்லது வளர்ப்புக் கூடத்தில் வளர்க்கலாம். இந்தக் காடைகளுக்கு அடை காக்கும் தன்மை கிடையாது.
ஆண் காடையை விடப் பெண் காடை 10-15 கிராம் கூடுதலாக இருக்கும்.
இயல்பிலேயே ஜப்பானிய காடைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால், இவற்றை எளிதாக வளர்க்கலாம்.
கோழி முட்டைகளைப் போலவே, ஜப்பானிய காடை முட்டைகளையும் உணவாகக் கொள்ளலாம்.
இந்த முட்டைகளில் புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப்புகள் என, அனைத்துச் சத்துகளும் அடங்கி உள்ளன.
மேலும், உடலுக்கு நன்மை செய்யும் செறிவுறாக் கொழுப்பு அமிலங்கள் அதிகளவில் உள்ளன. இந்த முட்டையின் எடை 10-12 கிராம் ஆகும்.
ஜப்பானிய காடை வளர்ப்பு, சிறந்த சுய தொழில் வாய்ப்பாகும். எனவே, வேலை வாய்ப்பைத் தேடுவோர் இந்தக் காடை வளர்ப்பைச் செய்யலாம்.
இதற்கான பயிற்சி மற்றும் ஆலோசனைப் பெற, அவரவர் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
பசுமை