கத்தரி விதை உற்பத்தி!

த்தரி விதை உற்பத்திக்கு ஏற்ற பருவம் ஜூன் முதல் செப்டம்பர் வரையாகும். பயிர் விலகு தூரம் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் இருக்க வேண்டும். கத்தரி விதை உற்பத்தி நிலத்தில் அடியுரமாக, எக்டருக்கு 44 கிலோ யூரியா, 180 கிலோ சூப்பர் பாஸ்பேட், 48 கிலோ பொட்டாசை இட வேண்டும்.

மேலுரமாக, செடிகள் பூப்பதற்கு முன் 44 கிலோ யூரியாவை இட வேண்டும்.

நன்கு பழுத்து மஞ்சள் நிறமாக மாறிய பழங்களை அறுவடை செய்து, சிறிய துண்டுகளாக நீள வாக்கில் அறுத்து 12 மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு, அதிகளவில் நீரைச் சேர்க்க வேண்டும்.

அப்போது மேலே மிதக்கும் சதைப் பகுதியை நீக்கி விட்டு நீரில் மூழ்கிய விதைகளை, சிறிது நீருடன் 2-3 மில்லி சாதா ஹைடிரோ குளோரிக் அமிலம் கலந்து 10 நிமிடம் வைக்க வேண்டும்.

பிறகு, நன்றாக நீரைக் கலந்து கழுவி விட்டு விதைகளை உலர வைக்க வேண்டும். பிறகு, பி.எஸ்.எஸ்.12 எண் கம்பி வலை மூலம் தரமான விதைகளைப் பிரித்தெடுக்கலாம். எக்டருக்கு 140-150 கிலோ விதைகள் கிடைக்கும்.


முனைவர் கோ.சதிஷ்

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!