அங்கக வேளாண்மையில் நூற்புழு மேலாண்மை!

யிர்களில், பூச்சிகள் மற்றும் நோய்களுக்கு இணையான சேதத்தை, நூற்புழுக்களும் விளைவிக்கின்றன.

எனவே, கோடை உழவு செய்வதன் மூலம் இவற்றைக் கட்டுப்படுத்தலாம்.

மூடாக்குப் போட்டு மண்ணை வெப்பமூட்டல் மூலமும் கட்டுப்படுத்தலாம்.

எக்டருக்கு 250 கிலோ வேப்பம் புண்ணாக்கை இடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

முக்கியப் பயிரில், துலுக்க சாமந்தி, வெங்காயம், சணப்பு, கொத்தமல்லி, பூண்டு ஆகியவற்றை, ஊடுபயிராக இடுவதன் மூலம், நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.

பேசிலோமைசிஸ் லிலாசினஸ் (1%WP) உயிர்ம நூற்புழுக் கொல்லியை, ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் வீதம் எடுத்து விதை நேர்த்தி செய்து விதைப்பதன் மூலமும்,

ஒரு லிட்டர் நீருக்கு 100 கிராம் நூற்புழுக் கொல்லி வீதம் கலந்த கரைசலில், நாற்றுகளை நனைத்து நடுவதன் மூலமும்,

எக்டருக்கு 5 கிலோ உயிர்ம நூற்புழுக் கொல்லி வீதம் எடுத்து, 50 கிலோ தொழுவுரத்தில் கலந்து நிலத்தில் இடுவதன் மூலமும், நூற்புழுக்களைக் கட்டுப்படுத்த முடியும்.


செய்தி: இயக்குநர், மாநில வேளாண்மை விரிவாக்க மேலாண்மை நிலையம், குடுமியான்மலை.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!