விவசாயிகளுக்கான வெள்ளாடு வளர்ப்புப் பயிற்சி!

புதுக்கோட்டையில், அண்டகுளம் சாலையில் அமைந்துள்ள, கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக, மண்டல ஆராய்ச்சி மையத்தில், விவசாயிகள் பயனடையும் வகையில், வெள்ளாடு வளர்ப்புக் குறித்த சுயவேலை வாய்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது. இது கட்டணப் பயிற்சியாகும்.

ஏப்ரல் 2 ஆம் தேதி (02.04.2024) தொடங்கி, ஒரு மாதம் வரை பயிற்சி நடைபெறும். இந்தப் பயிற்சியில், தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில் இருப்பவரும் கலந்து கொள்ளலாம்.வயது வரம்பு கிடையாது.

மார்ச் 15 ஆம் தேதிக்குள் (15.03.2024) முன்பதிவு செய்தால் மட்டுமே பயிற்சியில் கலந்து கொள்ள முடியும். தங்குவதற்கு ஆராய்ச்சி மையத்தில் விடுதி வசதி உள்ளது.

பயிற்சியின் சிறப்புகள்

+ வணிக ரீதியில், கொட்டில் முறையில், வெள்ளாடு வளர்ப்பு மற்றும் விற்பனை வாய்ப்பு.

+ நேரடி தடுப்பூசி போடுதல் குறித்த ஆலோசனை.

+ அரசு மற்றும் தனியார் பண்ணைப் பயிற்சி மற்றும் கல்விச் சுற்றுலா.

+ வங்கி அதிகாரியுடன் கலந்துரையாடல், வங்கிக் கடன் வசதி பெறுதல், திட்ட அறிக்கை தயாரித்தல்.

+ மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்கள்.

+ ஆடு வளர்ப்புக் கையேடு.

+ பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

இந்தப் பயிற்சி குறித்து மேலும் விவரங்கள் அறிய விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

டாக்டர் பூ.புவராஜன்,

பேராசிரியர் மற்றும் தலைவர்,

கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக மண்டல ஆராய்ச்சி மற்றும் கல்வி மையம், அண்டகுளம் சாலை, புதுக்கோட்டை.

தொலைபேசி எண்கள்: 94436 19255, 81225 36826.


செய்தி: கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக மண்டல ஆராய்ச்சி மற்றும் கல்வி மையம், புதுக்கோட்டை.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!