மதுரை மாவட்டம், திருமங்கலத்தில், விடத்தகுளம் சாலையில் அமைந்துள்ள திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று (04.03.2024) கீழ்க்கண்ட விளை பொருள்கள், இ-நாம் ஏலம் மூலம் விற்பனை செய்து தரப்பட்டன.
தி.புதுப்பட்டியைச் சேர்ந்த ஒரு விவசாயியின் 25,130 கிலோ மக்காச்சோளம், கிலோ ரூ.24.40 வீதம் விலை போனது. இதன் மூலம் ரூ.6,13,172-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
வேலூரைச் சேர்ந்த ஒரு விவசாயியின் 175 கிலோ இரத்தசாலி அரிசி, கிலோ ரூ.70 வீதம் விலை போனது. இதன் மூலம் ரூ.12,250-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
திருமங்கலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் 63 கிலோ வரகு அரிசி கிலோ ரூ.82 வீதம் விலை போனது. இதன் மூலம் ரூ.5,166-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
திருமங்கலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் 54 கிலோ குதிரைவாலி அரிசி, கிலோ ரூ.97 வீதம் விலை போனது. இதன் மூலம் ரூ.5,238-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
வாடிப்பட்டியைச் சேர்ந்த ஒரு விவசாயியின் 490 கிலோ பாரம்பரிய நெல் வகையான கறுப்புக்கவுனி நெல், கிலோ ரூ.69 வீதம் விலை போனது. இதன் மூலம் ரூ.32,830-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
எஸ்.பி.நத்தம், வில்லூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரு விவசாயிகளின் 265 கிலோ துவரை, அதிகபட்சம் கிலோ ரூ.88-க்கும், குறைந்தபட்சம் 80- க்கும் விலை போனது. இதன் மூலம் ரூ.21,720-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த ஒரு விவசாயியின் 70 கிலோ தேங்காய்க் கொப்பரை, கிலோ ரூ.82 வீதம் விலை போனது. இதன் மூலம் ரூ.5,740-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
குராயூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயியின் 44 கிலோ பாரம்பரிய நெல் வகையான குழி வெறிச்சான் நெல், கிலோ ரூ.40 வீதம் விலை போனது. இதன் மூலம் ரூ.1,760-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
அய்யங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயியின் 317 கிலோ பாரம்பரிய நெல்லான பூங்கார் நெல், கிலோ ரூ.35 வீதம் விலை போனது. இதன் மூலம் ரூ.11,095-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
ஆக மொத்தம் இன்று ஒரே நாளில் ரூ.7,08,971-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
மேலும் விவரங்களுக்கு அணுக வேண்டிய தொலைபேசி எண்கள்:
விற்பனைக்கூடக் கண்காணிப்பாளர்: 90251 52075.
மேற்பார்வையாளர்: 96008 02823.
சந்தைப் பகுப்பு ஆய்வாளர்: 87543 79755.
செய்தி: திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்.