கத்தரியில் உள்ள சத்துகள்!

ளம் பிஞ்சு மற்றும் முற்றிய காய்களைச் சமைத்து உண்ணலாம். குழம்பு வைத்தும் பொரியல் மற்றும் பஜ்ஜியாகத் தயாரித்தும் உண்ணலாம். பூச்சி தாக்கிய காய்கள் மற்றும் பழங்களைக் கால்நடைகளுக்குத் தரலாம்.

நூறு கிராம் கத்தரியில் புரதம் 1.4 கிராம், கொழுப்பு 0.3 கிராம், நார்ப் பொருள் 1.3 கிராம், மாவுப் பொருள் 4.0 கிராம், கால்சியம் 18 மி.கி., பாஸ்பரஸ் 47 மி.கி., இரும்பு 0.9 மி.கி., தயமின் 0.04 மி.கி., ரைபோ ஃபிளவின் 0.11 மி.கி., நியாசின் 0.9 மி.கி., வைட்டமின் சி 12 மி.கி., மெக்னீசியம் 33 மி.கி.,

சோடியம் 43.5 மி.கி., பொட்டாசியம் 39 மி.கி., தாமிரம் 0.17 மி.கி., கந்தகம் 53 மி.கி., குளோரின் 43 மி.கி., ஆக்சாலிக் அமிலம் 18 மி.கி., ஃபைட்டின் பாஸ்பரஸ் 3 மி.கி., கோலைன் 52 மி.கி., கரோட்டின் 74 மைக்ரோ கிராம், சக்தி 24 கிலோ கலோரி உள்ளன.

மேலும், 0.22 கிராம் நைட்ரஜன் உள்ளது. ஒரு கிராம் நைட்ரஜனில், ஆர்ஜினைன் 0.21 கிராம், ஹிஸ்டின் 0.13 கிராம், லைசின் 0.33 கிராம், டிரிப்டோபேன் 0.06 கிராம், ஃபீனைல் அலனின் 0.26 கிராம்,

டைரோசின் 0.24 கிராம், மீதியோனைன் 0.07 கிராம், லியூசின் 0.18 கிராம், ஐசோலியூசின் 0.27 கிராம், வேலைன் 0.32 கிராம் என, அமினோ அமிலங்கள் உள்ளன.


 

முனைவர் கோ.சதிஷ்

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!