கத்தரிக்காய் வெப்பத்தையும் பசியையும் கூட்டும். இதயத்தை வலுப்படுத்தும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். காய்ச்சல், இருமல், காசநோய், சிறுநீர்க் கடுப்பு ஆகியவற்றைத் தீர்க்கும்.
பழத்தைச் சுட்டு மாடுகளின் வயிற்று வலிக்கும், வயிற்றிலுள்ள புழுக்கள் நீங்கவும் தரலாம். சுட்ட பழம் பித்தம் தணிக்கும். வாயுவைக் குறைக்கும். நன்கு செரிக்கும்.
பழத்தில் ஊசியால் பல இடங்களில் குத்தி நல்லெண்ணெய்யில் வதக்கிப் பல் வலிக்குத் தரலாம்.
கத்தரி விதை மலக்கட்டு மற்றும் வயிற்று மந்தத்தை உண்டாக்கும். உடல் வெப்பத்தைக் கூட்டும். வாதநோய், மார்புச் சளிக்குக் கத்தரிக்காய் நல்லது. கத்தரி வேரில் சாறெடுத்து அருந்தினால், பெருங்கிரந்தி நோய் குணமாவதாகத் தென்னாப்பிரிக்க மக்கள் கருதுகிறார்கள்.
வலியைக் குறைக்கும் தன்மை வேருக்கு உண்டு. காலரா நோய் குணமாக உதவும்.
முனைவர் கோ.சதிஸ்