ஐம்பதுக்கும் மேற்பட்ட விளை பொருள்கள் ரூ.12 கோடிக்கு மேல் ஏலம்!

துரை மாவட்டம், திருமங்கலத்தில், விடத்தகுளம் சாலையில் அமைந்துள்ள திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில்,

இன்று (20.03.2024) கீழ்க்கண்ட விளை பொருள்கள், இ-நாம் ஏலம் மூலம் விற்பனை செய்து தரப்பட்டன.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால், திருப்பாச்சேத்தி, திண்டுக்கல், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஆகிய ஊர்களைச் சேர்ந்த விவசாயிகளின், 19,313 கிலோ கருப்புக்கவுனி நெல் ஏலத்துக்கு வந்தது.

இந்த நெல் அதிக விலையாக ரூ.82.50-க்கும், குறைந்த விலையாக ரூ.80- க்கும் விலை போனது. இதன் மூலம், ரூ.15,93,073 -க்கு வர்த்தகம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி, மீனாட்சிபுரம், கல்லுப்பட்டி மற்றும் காளப்பன்பட்டி ஆகிய ஊர்களைச் சேர்ந்த விவசாயிகளின், 1,17,272 கிலோ மக்காச் சோளம் ஏலத்துக்கு வந்தது.

அது கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.24-க்கும், குறைந்த விலையாக ரூ.24.30-க்கும் விலை போனது. இதன் மூலம், ரூ.28,24,401 -க்கு வர்த்தகம் நடைபெற்றது.

எஸ்.பி.நத்தம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியின், 25,000 கிலோ இருங்குச்சோளம் ஏலத்துக்கு வந்தது.

அது, கிலோ ரூ.40.50 வீதம் விலை போனது. இதன் மூலம், ரூ.10,12,500 -க்கு வர்த்தகம் நடைபெற்றது.

தொட்டியபட்டி, வெள்ளாகுளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரு விவசாயிகளின், 690 கிலோ துவரை ஏலத்துக்கு வந்தது.

அது, கிலோ ரூ.78 வீதம் விலை போனது. இதன் மூலம், ரூ.53,820 -க்கு வர்த்தகம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயியின், 200 கிலோ கருப்புக்கவுனி அரிசி ஏலத்துக்கு வந்தது.

அது, கிலோ ரூ.150 வீதம் விலை போனது. இதன் மூலம், ரூ.30,000 -க்கு வர்த்தகம் நடைபெற்றது.

காளப்பன்பட்டி, தொட்டியபட்டி, எஸ்.பி.நத்தம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின், 360.3 கிலோ எள் ஏலத்துக்கு வந்தது.

அது கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.165-க்கும், குறைந்த விலையாக ரூ.150-க்கும் விலை போனது. இதன் மூலம், ரூ.56,069 -க்கு வர்த்தகம் நடைபெற்றது.

திருமங்கலம், லாலாபுரம், மருதங்குடி ஆகிய ஊர்களைச் சேர்ந்த விவசாயிகளின், 205.5 கிலோ மிளகாய் வற்றல் ஏலத்துக்கு வந்தது.

அது, கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.170-க்கும், குறைந்த விலையாக ரூ.155-க்கும் விலை போனது. இதன் மூலம், ரூ.43,920 -க்கு வர்த்தகம் நடைபெற்றது.

எஸ்.பி.நத்தம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியின், 111 கிலோ மல்லி ஏலத்துக்கு வந்தது. அது, கிலோ ரூ.110 வீதம் விலை போனது. இதன் மூலம், ரூ.12,210 -க்கு வர்த்தகம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயியின், 73 கிலோ இரத்தசாலி அரிசி ஏலத்துக்கு வந்தது.

அது, கிலோ ரூ.70 வீதம் விலை போனது. இதன் மூலம், ரூ.5110 -க்கு வர்த்தகம் நடைபெற்றது.

சேடப்பட்டி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மூலம் வந்த, 20 கிலோ புளி ஏலம் விடப்பட்டது.

அது, கிலோ ரூ.115 வீதம் விலை போனது. இதன் மூலம், ரூ.2,300 -க்கு வர்த்தகம் நடைபெற்றது.

திருமங்கலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மூலம் வந்த, 10 கிலோ தினை அரிசி, 10 கிலோ சாமை அரிசி, 52 கிலோ வரகு அரிசி, 56 கிலோ குதிரைவாலி அரிசி ஏலம் விடப்பட்டது.

குதிரைவாலி அரிசி கிலோ ரூ.97-க்கும், தினை அரிசி ரூ.110-க்கும், சாமை அரிசி ரூ.90 க்கும், வரகரிசி ரூ.82-க்கும் விலை போனது. இதன் மூலம், ரூ.11646 -க்கு வர்த்தகம் நடைபெற்றது.

அய்யங் கோட்டை விவசாயியின், 175 கிலோ தூய மல்லி அரிசி ஏலத்துக்கு வந்தது. அது, கிலோ ரூ.70 வீதம் விலை போனது.

இதன் மூலம், ரூ.12,250 -க்கு வர்த்தகம் நடைபெற்றது. ஆக, மொத்தம் ரூ.56,68,349 -க்கு வர்த்தகம் நடைபெற்றது.

இவ்வகையில், திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், இதுவரை 50க்கும் மேற்பட்ட விளை பொருள்களை, இ-நாம் ஏலம் மூலம், ரூ.12 கோடிக்கு மேல் விற்பனை செய்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு அணுக வேண்டிய தொலைபேசி எண்கள்:

விற்பனைக்கூடக் கண்காணிப்பாளர் G.வெங்கடேஷ்: 90251 52075.

மேற்பார்வையாளர்: 96008 02823.

சந்தைப் பகுப்பாளர்: 87543 79755.


செய்தி: திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!