காளானின் பயன்கள்!

காளானை ஏழைகளின் இறைச்சி என்று கூறலாம். ஏனெனில், இறைச்சியில் உள்ள புரதத்தைப் போலவே, காளானிலும் முழுமையான புரதம் அடங்கி உள்ளது.

காளானில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் எளிதில் செரிக்கும். மேலும், குறைவான கொழுப்புச் சத்துடன் இருப்பதால்,

பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக உள்ளது.

இதய நோய், இரத்தழுத்தம், மலச்சிக்கல் உள்ளோர்க்குச் சிறந்த உணவாகும்.

அறுவடைக்குப் பின் சிலமணி நேரத்தில் காளான் கெட்டு விடும். எனவே, காளானை நீண்டகாலச் சேமிப்பு, குறுகிய காலச் சேமிப்பு, டப்பாவில் பதப்படுத்துதல்,

காய வைத்துப் பதப்படுத்துதல், உப்புக் கரைசலில் பதப்படுத்துதல், உறைய வைத்துப் பதப்படுத்துதல்,

உறைந்த பின் காய வைத்துப் பதப்படுத்துதல் போன்ற முறைகள் மூலம், பலவகை மதிப்புமிகு பொருள்களைத் தயாரிக்கலாம்.

அதாவது, காளான் ஊறுகாய், குருமா, பஜ்ஜி, சமோசா, போண்டா, சூப், பிரியாணி, ஆம்லெட், பொரியல், சிப்ஸ், பக்கோடா போன்றவற்றைத் தயாரிக்கலாம்.

காளானின் மருத்துவப் பயன்கள்: காளானில் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள்,

டிரிப்டோபேன், ஐசோலுசைன் மற்றும் நோய் எதிர்ப்பைத் தரும் வைட்டமின்கள், தாதுகள் நிறைந்து உள்ளன.

காளானில் குறைந்தளவில் கொழுப்பும் மாவுச்சத்தும் உள்ளதால், சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள், இரத்தழுத்தம் உள்ளவர்களுக்கு இது மிகவும் ஏற்ற உணவாகும்.

காளானில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. எனவே, மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறு உள்ளோக்கும், உடல் எடையைக் குறைக்க நினைப்போர்க்கும் ஏற்ற உணவாகக் காளான் உள்ளது.

காளானில், கால்சியம், பாஸ்பரஸ், போலிக் அமிலம், இரும்புச்சத்து ஆகியன அதிகளவில் உள்ளன.

அதனால், இரத்தச்சோகை போன்ற நோய்களில் இருந்து உடல் காக்கப்படுகிறது.

மூட்டுவலி, சதைப்பிடிப்பு ஆகியவற்றுக்குக் காளான் நல்ல தீர்வைத் தரும். பெண்களின் கருப்பைச் சிக்கலைச் சரி செய்யும் காளான், புற்றுநோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

காளான் சாறு எய்ட்ஸ் நச்சுயிரிகளை அழிக்கப் பெரிதும் பயன்படுகிறது. காளானில் இருந்து நேரடியாக, மருந்து, மாத்திரை, பேஸ்ட் போன்றவை தயாரிக்கப் படுகின்றன.

கோனோடெர்மா போன்ற சிலவகைக் காளான்களில் இருந்து உயிர் காக்கும் மருந்து, அதாவது, வாழ்நாளை நீட்டிக்கும் மருந்து தயாரிக்கப் படுகிறது.

பிளிரோடஸ் என்னும் காளானைக் காய வைத்துப் பொடியாக்கி, ஆறாத புண்களைக் குணமாக்கும் களிம்பைத் தயாரிக்கிறார்கள்.

காளானின் பிற பயன்கள்: காளான் அறுவடைக்குப் பிறகு கிடைக்கும் கழிவில் தழைச்சத்து அதிகமாக இருப்பதால், இதை எருவாக, மாட்டுத் தீவனமாகப் பயன்படுத்தலாம்.

தென்னை நார்க்கழிவு போன்ற பண்ணைக் கழிவுகளை மட்க வைக்க, நொதிப் பொருள்களைத் தயாரிக்க, பயிர்களைத் தாக்கும் நோய் மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும்

ஸ்டரோபுலின் என்னும் வேதிப் பொருளைத் தயாரிக்க, சிப்பிக் காளான் உதவுகிறது.


முனைவர் சு.கண்ணன்,

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!