மீன் வளர்ப்புப் பயிற்சியில் தோட்டக்கலைக் கல்லூரி மாணவியர்!

விவசாயிகளுக்காக நடத்தப்பட்ட மீன் வளர்ப்புப் பயிற்சியில், ஊரக வேளாண்மை அனுபவப் பயிற்சியில் ஈடுபட்டு வரும், பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவியர் பங்கேற்றுப் பயனடைந்தனர்.

மாநில விரிவாக்கத் திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு அட்மா திட்டத்தின் கீழ், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், மீன் வளர்ப்புப் பயிற்சி, உத்தம பாளையம் வட்டம், டி.மீனாட்சிபுரத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு, மீன் வளர்ப்பு முறைகள், மீன் வளர்ப்பில் இடம்பெறும் பல்வேறு வளர்ப்பு மீன் இரகங்கள், அவற்றின் உணவு மற்றும் பாதுகாப்பு முறைகள் பற்றி, மீன்வளத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

மேலும், பயிற்சி முடிந்த பிறகு, விவசாயிகள் கேட்ட ஐயங்களுக்கும், மீன் வளத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில், பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரியில், இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள், பிரியா, நந்தனா, மேக்னா, பொன்னரசி ஆகியோர் கலந்து கொண்டனர்


மு.உமாபதி

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!