பவளப் பாறைகளின் சிறப்பு!

நிலப்பரப்பில் உள்ள மழைக் காடுகளைப் போன்றவை, கடலில் உள்ள பவளப் பாறைகள்.

சுமார் ஆறு இலட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பில் விரிந்து கிடக்கும் இவற்றில், பலவகைக் கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன.

இந்தப் பாறைகளின் வளர்ச்சியால் பவளத் திட்டுகள் அல்லது பவளத் தீவுகள் உருவாகின்றன.

பவளப் பூச்சியினங்கள், இந்திய மற்றும் பசிபிக் கடலில் அதிகமாக உள்ளன.

அறுபது சதப் பவளப் பாறைகள் இந்து மாக்கடலில் மட்டுமே உள்ளன.

இவை, இந்தியாவில் அந்தமான், நிக்கோபார் தீவுகள், இலட்சத் தீவுகள், மன்னார் வளைகுடா, பாக். ஜலசந்தி மற்றும் கட்ச் வளைகுடாப் பகுதிகளில் உள்ளன.

பவளப் பாறைகளில் உள்ள வேதிப் பொருள்கள் பல்வேறு நோய்களைக் குணமாக்கும் மருந்துகள் தயாரிப்பில் பயன்படுகின்றன.

பவளப் பாறைகள், புயல் மற்றும் அலைகளின் பாதிப்பில் இருந்து, கடலோரப் பகுதிகளைக் காக்கின்றன.

இந்தப் பாறைகள் அழிக்கப்பட்டால், கடற்கரை அரிப்பு ஏற்படும் ஆபத்து உருவாகும்.


தொகுப்பு: பசுமை

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!