நாமக்கல் பிஜிபி வேளாண்மைக் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் ஒன்பது மாணவியர், சேலம் மாவட்டம், பனைமரத்துப் பட்டியில் வேளாண்மை கிராமப்புறப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, 07.03.2024 அன்று, பனைமரத்துப்பட்டி கால்நடை மருத்துவ மனைக்கு வருகை புரிந்தனர்.
அவர்களுக்கு, கால்நடை மருத்துவமனை மருத்துவர் சுகன்யா, கால்நடைகளில் செயற்கை கருவூட்டல் பற்றி விளக்கினார்.
அப்போது, செயற்கை கருவூட்டலுக்குப் பயன்படும் விந்தணுக்களை, 35 லிட்டர் கொள்கலனில் -196 டிகிரி செல்சியஸ் திரவ நைட்ரஜனில் சேமித்து வைப்பார்கள்.
இந்தத் திரவ நைட்ரஜனில் வைப்பதன் நோக்கம், விந்தணுக்கள் நீண்ட காலம் கெடாமல் இருக்கும் என்பது தான்.
கால்நடைகளில் செலுத்து முன், கொள்கலனில் உள்ள விந்தணுக்களை வெளியே எடுத்து, 37 டிகிரி செல்சியஸ் வெப்பமுள்ள, இளஞ்சூடான வெந்நீரில், முப்பது நிமிடம் வைக்க வேண்டும்.
பிறகு, செயற்கை கருவூட்டல் துப்பாக்கி மூலம், கால்நடைகளில் செலுத்த வேண்டும் என்று விளக்கினார்.
மேலும், கால்நடைகளைத் தாக்கும், ரான்சிட் நோய்க்கு, இங்கே வாரந்தோறும் தடுப்பூசி போடப்படும் என்றும்,
கோமாரி நோய்க்கு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, தடுப்பூசி போட வேண்டும் என்றும், மாணவியரிடம் தெரிவித்தார்.
ஆண்டுக்கு ஒருமுறை, சிறப்புக் கால்நடை மருத்துவ முகாம் மற்றும் கருவுறாமைத் தடுப்பு முகாம் நடைபெறும் என்றும்,
அப்போது, கால்நடைகளில் கருப்பை வளர்ச்சியைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம் என்றும், கால்நடை மருத்துவர் கூறினார்.
செய்தி: க.மித்ரா, ப.கயல்விழி, வே.கிரிதரணி, சி.சுவிகா, சி.சஹானா, சி.மோனிகா, இரா.அனாமிகா, இரா.ஹரிஸ்மா, ஜோ.ஸ்ரீலட்சுமி, பயிற்சி மாணவியர்.