சேலம் மாவட்டம், பனைமரத்துப்பட்டி வட்டம், அம்மாபாளையம் கிராமத்தில், கடந்த 09.03.2024 அன்று, வேளாண்மைத் தொழில் நுட்ப மேலாண்மை முகாம் நடைபெற்றது.
நெற்பயிரில் ஒருங்கிணைந்த மேலாண்மை என்னும் தலைப்பில், வேளாண்மைத் துறை அதிகாரிகள் இந்த முகாமை நடத்தினர்.
இதில், பிஜிபி வேளாண்மைக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவியர் ஒன்பது பேர் கலந்து கொண்டனர்.
கிராமப்புற வேளாண்மைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள இந்த மாணவிகள், விவசாயிகளுடன் கலந்துரையாடி, நெற்பயிரில் வரக்கூடிய நோய்கள், அவற்றுக்கான தீர்வுகள்
மற்றும் விதை நேர்த்தி செய்யும் முறைகள் குறித்து அவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.
இதனையடுத்து, வேளாண்மைத் துறை அதிகாரிகள், விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்தனர்.
இந்நிகழ்வு, மாநில விரிவாக்கத் திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் நடைபெற்றது.
செய்தி: க.மித்ரா, ப.கயல்விழி, வே.கிரிதரணி, சி.சுவிகா, சி.சஹானா, சி.மோனிகா, இரா.அனாமிகா, இரா.ஹரிஸ்மா, ஜோ.ஸ்ரீலட்சுமி, பயிற்சி மாணவியர்.